உலகளாவிய ரீதியில் ‘ஒமிக்ரோன்’ தொற்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்கி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டுக்குள் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என பிரதி சுகாதாரப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்
மேலும், உலகின் பல பாகங்களிலும் பரவிவரும் மாறுபாடான கொவிட் தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு உரிய சுகாதார ஆலோசனைகள் பின்பற்றப்பட வேண்டும். நாட்டை மூடுவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews