நாட்டில் அடுத்த சில மணித்தியாலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்காலிகமாக பலத்த காற்று வீசும் எனவும், மக்களை எச்சரிக்கையாகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
#SriLankaNews