இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும். இன்று அதிகாலை மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
 
 
 
                     
                             
				             
				             
				             
				             
 
 
 
 
 
