ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

25 693fd3d85a76b

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (09) நண்பகலுடன் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண தலைமைச் செயலாளர் இது குறித்து விடுத்துள்ள அறிவிப்பில் இன்று முற்பகல் 11.45 மணியுடன் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும். மாகாணத்திலுள்ள மொத்தம் 892 பாடசாலைகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மாகாணத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை தொடர்வதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகே வசிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிலைமை சீரானதும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version