மீண்டும் நடைமுறைக்கு வரும் சுகாதார ஒழுங்குவிதிகள்!

lka covid results 2

மக்கள் முறையாக சுகாதார ஒழுங்குமுறைகளை பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட சோதனை நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடு பாரிய தொற்றில் இருந்து வழமைக்கு திரும்பும் நிலையில் , மக்கள் தொடர்ந்து சுகாதார ஒழுங்குமுறைகளை பின்பற்றாமையினால் மீண்டும் நாட்டில் கொரோனா தொற்று பரவி வருகின்றது.

இதனால் மக்களிடையே பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை கண்காணிக்க விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

இதனை மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version