தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும்வரை அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணம் தனக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தாரென கூட்டமைப்பு உறுப்பினரொருவர் ‘தமிழ்நாடி’யிடம் தெரிவித்தார்.
உடல் நலத்தைக்கருத்திற்கொண்டு, வைத்தியர்களின் ஆலோசனையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரா. சம்பந்தன் எம்.பி. இராஜினாமா செய்யவுள்ளாரெனவு தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து இது தொடர்பில் தான் தலைவருடன் கலந்துரையாடியதாகவும், அவ்வாறு எந்தவொரு முடிவையும் அவர் எடுக்கவில்லையெனவும் அந்த உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
“ஐயாவுக்கு வயது முதிர்ந்திருந்தாலும் ஆளுமையும், நிதானமும் அவ்வாறே உள்ளது. அவரின் வகிபாகம் தமிழர் அரசியலுக்கு மிக முக்கியம்.” எனவும் அவர் மேலும் கூறினார்.
#SriLankaNews