யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தினரால் நேற்றையதினம் செங்கோல் கையளிக்கப்பட்டது.
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக இந்த செங்கோல் கையளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சிவபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக, நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கோலே யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனிடம், நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரால், நல்லூர் ஆலய வளாகத்தினுள் வைத்து இன்று பிற்பகல் 5.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக செங்கோல் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews