முகமாலை பகுதியில் அமைந்துள்ள காணிகளின் ஒரு பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – முகமாலை பகுதியில், பல வருடங்களாக கண்ணிவெடி அகற்றப்பட்டுவந்த நிலையில், கண்ணிவெடி முற்றாக நீக்கப்பட்ட 316 ஏக்கர் காணி, உத்தியோகபூர்வமாக அவற்றின் உரிமையாளர்களிடம் இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்களின் தேங்காய் எண்ணெய் ஆலைகள் இரண்டு, தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம், சேதனப்பசளை உற்பத்தி மையம் ஆகியவையும், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு காணிகளை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews