குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை – சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Capture 4

Gurmeet Ram Rahim Singh

கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த 2002ம் ஆண்டு குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மீது குற்றம் சாட்டப்பட்டு பொலிஸார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இக்கொலை தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவந்த நிலையில் இன்று ஆயுள் தண்டனை என்ற அதிரடி தீர்ப்பை நீதிமன்றம் அறிவித்தது.

அத்தோடு அவரோடு இணைந்து கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் தண்டனை உடன் சேர்த்து ரூ.31 லட்சம் அபராதம் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version