கடந்த 8 ஆம் திகதி குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
80 சதவீத தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட வருண் சிங்கை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் முயற்சித்தும் பயனளிக்காமையால் அவர் உயிரிழந்துள்ளார்.
வருண் சிங் தேசத்திற்கு பாரிய சேவை ஆற்றியமையை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இரங்கல் செய்தியையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வருண் சிங்கின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களின் இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளனர்.
#IndiaNews