நாட்டில் தற்போது போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இந்நிலையில், பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரின் தகவல்கள் நாட்டில் போதைப்பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை போதைப்பொருட்கள் விலைகளும் மிகப்பெருமளவில் அதிகரித்துள்ளன. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலமாக போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட போதை வர்த்தகர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் போதைப்பொருள் வர்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது. – என்றார்.
#SriLankaNews