கொரோனா தொற்றை பரிசோதிக்கும் ரெபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு நாளாந்தம் வெளியிடும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதைவிட பல மடங்கு அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த கொவிட் அலை தற்போது உருவாகி கொண்டிருக்கிறது. பாடசாலைகளுக்கிடையில் வைரஸ் வேகமாக பரவி வருவதையும் பொது சுகாதார பரிசோதகர்கள் அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை கர்ப்பிணிப் பெண்களை கடமைக்கு வரும்படி பணித்துள்ளதால் அவர்களினல் பெரும்பாலானோருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
#SriLankaNews