யாழ்ப்பாணத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளுநர் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு
கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டார்.
அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் பயனாளிகளுடனும் கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
இன்று காலை இடம்பெறவுள்ள இலங்கை மத்திய வங்கியின் விசேட கலந்துரையாடலில் பங்கேற்கும் முகமாகவே மத்திய வங்கி ஆளுநரது விஜயம் அமைந்துள்ளமைக்கு குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews