நாளை முதல் நாட்டில் பொதுச்சேவைகள் வழமைகு திரும்பவுள்ளன என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவிக்கையில்,
இந்த புதிய ஆண்டில் பொதுச்சேவைகளுக்காக மிகப்பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாயம், கைத்தொழில் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றங்களுக்கு அவற்றை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்.
இதன்படி, அரச ஊழியர்கள் நாளை முதல் வழமை போன்று பணிக்கு அழைக்கப்படுவார்கள்.
கடந்த வருடம், கொவிட் பரவல் காரணமாக, வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு பல சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டதுடன், அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே கடமைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment