உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே பேராயர் சர்வதேசத்தை நாடியுள்ளார். அதற்கான வழியை இந்த அரசே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே தகவல்கள் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பிலும், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சம்பந்தமாகவும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
மாறாக நீதிக்காக குரல் எழுப்புபவர்கள் தண்டிக்கப்பட்டனர். இதனால்தான் நீதிக்காக பேராயர் சர்வதேசம் சென்றுள்ளார். உள்நாட்டில் நீதி கிடைத்திருந்தால், அவருக்கு பாப்பரசரை நாடவேண்டி வந்திருக்காது. எனவே, இதற்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும்.” – என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
#SriLankaNews