அரச நிறுவனங்களில் இனி ஏ.சி கிடையாது!

air conditioners

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறையை தொடர்ந்து பொது சேவைகள் அமைச்சால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை சேமிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில்,

அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வளி சீராக்கிகள் (ஏ.சி) பிற்பகல் 2.30 மணிக்கு பின்னர் மிருத்தப்படும். தேவைக்கு அதிகமாக கொடுக்கப்படும் கூடுதல் எரிபொருள் கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை கூட்டங்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக கொழும்புக்கு அழைப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version