அவுஸ்திரேலியா செல்லவுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Airport 2

கொவிட் தடுப்பூசியினை முழுமையாக செலுத்தியவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய விதிக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மோரிசன் தீர்மானித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் பல்கலைக்கழக மாணவர்கள், விசா வைத்திருப்பவர்கள், வர்த்தகர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர் அவுஸ்திரேலியாவிற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை கடந்த ஆண்டு மே மாதம் அவுஸ்திரேலியாவின் எல்லை மூடப்பட்டது, ஆனால் நிரந்தர குடியிருப்பாளர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான குழுவினருக்கு மட்டுமே அந்நாட்டினுள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பொருளாதாரத்தை அடிப்படியாகக்கொண்டு, அவுஸ்திரேலியா இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

#WorldNews

Exit mobile version