தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு!

gold

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி தங்க சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபா 5 ஆயிரத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொழும்பு – செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 22 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவுக்கும் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேவேளை, உலக தங்க சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் ஆயிரத்து 818 ஐக்கிய அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

குறிப்பாக தங்கத்தின் விலை உலக சந்தியில் கடந்த ஒரு மாதத்துக்குள் 11 டொலர்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version