taliban
செய்திகள்உலகம்

தற்கொலை குண்டுதாரிகளுக்கு பரிசில்கள்- நிறைவேறுமா தலிபான்களின் நோக்கம்?

Share

ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தினருக்கு தலிபான்களால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிற நடவடிக்கை சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது.

ஆப்கானின் படைகள் மற்றும்  அமெரிக்கப் படைகளுக்கு எதிராக  மேற்கொண்ட தற்கொலைக்குண்டுதாரிகளின் குடும்பத்தினதினரை ஊக்குவிக்கும் முகமாக தலிபான்ககளால் பரிசில்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தாலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில், அமெரிக்கப் படையினர் வெளியேறியிருந்தனர்.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி தலிபான்களின் வசமானது.

இந்நிலையில் அமெரிக்காப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த காலப்பகுதிகளில், அவர்கள் மீதும், ஆப்கானிஸ்தான் படையினர் மீதும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடாத்திய தலிபான்களுக்கு வெகுமதியளிக்கும் பொருட்டு, உயிரிழந்த தலிபான்களின் குடும்பங்களுக்கு, தலிபான் ஆட்சியாளர்களால் வெகுமதியளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கமைய தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்ட தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 ஆயிரம் ஆப்கான் நாணயங்களை வழங்கவும், அக்குடும்பங்களுக்கு சொந்த நிலத்தை வழங்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...