இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி இளைஞனுக்கு ஒரு தொகை பணத்தினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள்.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் கொட்டடியில் வசிப்பவர். அவரின் தந்தை இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்.
தாயின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த குறித்த இளைஞன் வீட்டு அலங்கார பொருட்களையும் கைவினைப் பொருட்களையும் செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews