முதலில் மக்களின் பசியை போக்குங்கள்! – சபையில் கீதா

geetha

காப்பெட் வீதிகளை அமைக்க முதல் மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டும் உணவு உண்ணும் ஏழை மக்கள் காணப்படுகின்றனர். காப்பெட் வீதிகளை நிர்மாணிப்பதற்கு முன்னர், அவர்களுக்கு குறைந்து மூன்று வேளை ஆயினும் உணவு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரவு – செலவுத் திட்டத்தில் பெண்களுக்கு 3 வீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 52 வீதமானவர்கள் பெண் வாக்காளர்களே. பெண்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Exit mobile version