எரிவாயு அடுப்பு வெடிப்பு!

WhatsApp Image 2021 12 31 at 11.09.50 AM

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரப்பனை பகுதியில் எரிவாயு அடுப்பொன்று வெடித்து சிதறியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு உணவு சமைத்துக்கொண்டிருந்தவேளையிலேயே எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version