நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், ஹோட்டல்களும், சிறு அளவிலான உணவு விற்பனை நிலையங்களும் மூடப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஹோட்டல் தொழில் துறையில் உள்ள சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் பலர் தொழில்களை இழந்துள்ளனர் எனவும், ஹோட்டல்களுக்கான வாடகைப் பணத்தைகூட செலுத்த முடியாமல், உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சில ஹோட்டல்கள் திறக்கப்பட்டிருந்தாலும் அங்கு கொத்து ரொட்டி, ரைஸ் போன்ற உணவுகள் தயாரிக்கப்படுவதில்லை எனவும், விறகை பயன்படுத்தியே கடும் சவால்களுக்கு மத்தியில் சமையல் இடம்பெறுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களை நடத்துபவர்கள், சமையல் எரிவாயு இன்மையால் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#SriLankaNews