எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 850 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் அரசிடம் முன்வைத்துள்ளது.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிவாயுவை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் எரிவாயு விற்பனை நிலையங்களில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews

