எரிவாயு விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு பலருக்கு அழைப்பு!!

Human Rights

எரிவாயு விவகாரம் தொடர்பில் அரச நிறுவனங்களின் அலட்சியம் குறித்து முக்கிய அரச நிறுவனங்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

எரிவாயு விவகாரம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்கள் இன்று காலை 11 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version