இலங்கைக்குள் எரிவாயு கப்பல்களில் வரும் சிலிண்டர்களை ஆய்வுக்குட்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (03) இரவு 9.30 மணியளவில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கப்பலுக்குச் சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த கப்பல் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமானது.
தொடர்ந்து நாட்டில் எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமையினால், இனி நாட்டிற்குள் கொண்டுவரப்படும் அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews