102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

Share

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு எதிராக பாதாளக் குழுவொன்று சதித்திட்டம் தீட்டுவதாகவும் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இரு அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு செயலாளருக்கு, ஞானசார தேரர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள தமது விஹாரைக்கு வருகை தந்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் வழங்கியதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தாம் தற்போது கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் நாட்டில் நீண்டகாலமாக உருவாகியுள்ள உலகளாவிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய இஸ்லாமிய வன்முறைகள் குறித்து நான் பல்வேறு வெளிப்படுத்தல்கள் செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...