நாட்டில் கன்று உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கறுவா, தெங்கு மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு குறித்த உதவிகள் வழங்கப்படவுள்ளன.
புதிதாக தேயிலை உற்பத்தி செய்வோருக்கும், மீள்நடுகை மேற்கொள்வோருக்கும் தேயிலை அபிவிருத்தி அதிகார சபை இலவசமாக கன்றுகளை வழங்கவுள்ளன.
அத்தோடு தெங்கு உற்பத்தி மேம்பாட்டு திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
#SriLankaNews