எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாகக் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் டொலர் இன்மையால் எரிபொருள் கொள்வனவு செய்வதில் பெரும் நெருக்கடி காணப்படுவதாகவும் கனிய எண்ணெய் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SrilnkaNews