இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.
இவ்வாறு இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும் எரிபொருள் விலைகள் இன்னும் ஒரு சில நாட்களில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் அதிகரிக்கப்படும்.
நட்டு மக்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். இதற்கு அரசின் உறுதித்தன்மையற்ற நடவடிக்கைகளே காரணம் – எனவும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews

