நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!!

fuel price

எரிபொருள்கள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் ஒக்டென் 92 வகை பெற்றோலின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு லீற்றர் ஒட்டோ வகை டீசல் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலையில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Exit mobile version