மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!!

Udaya Gammanpila

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சர் தீர்மானிப்பார் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் பாரிய வேறுபாடு இருப்பதால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த மக்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version