பாவனையை குறைக்கவே எரிபொருள் விலை அதிகரிப்பு!

Fuel

எரிபொருள் பாவனையை குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எரிபொருள் விலையை அதிகரிப்பதன் முக்கிய நோக்கம் நுகர்வு தேவையை குறைக்கவேண்டும் என்பதே ஆனால் கடந்த முறை விலை உயர்வு அந்த நோக்கத்தை எட்டவில்லை.

எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் நிரந்தர பொறிமுறை நம்மிடமில்லை. எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது தானாகவே நடக்க வேண்டும்.

எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க நாம் சட்டம் இயற்றி ஒரு அமைப்பை உருவாக்க முடியாது. மின்சாரத்தைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்லது. இது மறைமுகமாக எரிபொருளையும் சேமிக்கின்றது என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version