அடிக்கடி மின்வெட்டு!! – காரணம் கேட்ட டோனி மனைவி

image

இந்தியாவில் பரவலாக தற்போது மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவ் விடயம் தொடர்பில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்‌ஷி,

வரி செலுத்துபவராக கேட்கிறேன், ஜார்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் தனிநபராக முன்னணியில் உள்ளவர் டோனி என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்‌ஷி பதிவிட்டுள்ள இந்த பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், வைரலாகியும் வருகிறது.

#India

Exit mobile version