சுதந்திர கட்சியாலேயே தேர்தலில் வெற்றி! – கூறுகிறார் தயாசிறி

dayasiri jayasekara

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

அம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமாக வெளியேறலாம் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

” எவரும் தனித்து செயற்படுவதில் பலன் இல்லை. 2019 இல் சுதந்திரக்கட்சியின் 15 லட்சம் வாக்குகள் தீர்மானம்மிக்கதாக இருந்தது. எனவே, எதிர்காலத்தில் ஜனாதிபதி, அல்லது பிரதமராக காத்திருக்கும் நாமல் ராஜபக்ச எமது கட்சி ஆதரவு இல்லாமல் எப்படி பிரதமராகின்றார் என பார்த்துக்கொள்வோம்.” – என்றும் தயாசிறி குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version