நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதால், இவ்வாறான மோசடிக்காரர்கள் குறித்து மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில நகரங்களில் சில தனி நபர்கள் இவ்வாறு மோசடியான செயல்களில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.
இந்த மோசடிக்காரர்கள் ஒவ்வொரு வர்த்தக நிலையங்களுக்கும் சென்று சுமார் 2,000 ரூபாய் வசூலிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவுகளுக்கு மத்தியில், சில தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையை இந்தப் மோசடிக்காரர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் வசூலிப்பதாகத் தெரிய வருகிறது.
எனினும், பல வர்த்தக நிலையங்கள் குறித்த நபருக்குப் பணம் வழங்கவில்லை என அறியமுடிகிறது. அனர்த்த நிவாரண நிதியுதவி வழங்கும் போது, உரிய அதிகாரபூர்வ நிறுவனங்களை மட்டுமே அணுகுமாறும், தனி நபர்களிடம் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.