12 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் பிரான்சில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தென்மேற்கு பிரான்சின் பெரும்பகுதி மற்றும் வட ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் நதிகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் நீர் நிரம்பியுள்ளதால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பாடசாலைகள், பாதைகள் மூடப்பட்டுள்ளதுடன் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment