இந்திய மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியது. சீதாபூர் மற்றும் உபரியா கிராமங்களுக்கு இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய லொறி சாரதி, சிருலா பகுதியில் உள்ள சுங்கச் சாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Indianews
Leave a comment