இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சாடிய பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி, வெறுப்பு அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் கட்சியின் மீது லாலு பிரசாத் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், மத்திய அரசு, அதன் கொள்கைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பாட்னாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.
இந்து மதச் சடங்குகளின்படி, ஒருவர் தனது பெற்றோரின் மறைவுக்குத் தலை முடியை மொட்டையடிக்க வேண்டும். எனினும் நரேந்திர மோடி அதனை செய்யவில்லை என்றும் யாதவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இந்தி, இந்துத்துவ அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மோடி எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வந்து செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments are closed.