ஜனாதிபதி பொது வேட்பாளராக களமிறங்கப்போகும் முன்னாள் அமைச்சர்!!

அர்ஜுன ரணதுங்க

வரவிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயார் என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஊழல், மோசடியுடன் தொடர்புபடாத – தெளிவான கொள்கையுடை தரப்புகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்தால் அதனை ஏற்று, சவாலை எதிர்கொள்ள தான் தயார் எனவும் அறிவித்துள்ளார்.

எனினும், தொடர்ந்தும் ஐ.தே.கட்சியுடனேயே  பயணித்தார். ஆனால் கட்சியில் உரிய மறுசீரமைப்புகள் இடம்பெறாததால் ஐ.தே.கவின் உறுப்புரிமையை நேற்று முன்தினம் துறந்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின்கீழ் போட்டியிட்ட ரணதுங்க தோல்வியைத் தழுவியமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version