கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கம்பஹா நீதிமன்றம் இன்று (09) பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஒரு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
அந்தத் துப்பாக்கி, கடந்த 2001-ஆம் ஆண்டு இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்று அவர் கம்பஹா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, வழக்கை ஆராய்ந்த நீதிபதி அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார். எனினும், வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.