சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பலவந்தமாக நாட்டுக்கு கொண்டுவர முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
அவரை இங்கு கொண்டுவருவது சம்பந்தமாக சிங்கப்பூரின் சட்டமா அதிபருடன் பேச்சுகள் நடத்தப்படடுள்ளன.
எனினும், அதில் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும், இதன்காரணமாகவே அர்ஜுன் மகேந்திரன் இன்றியே வழக்கு விசாரணையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் அப்போது ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன் மகேந்திரனுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும், அவர் எங்கிருந்தாலும் நாட்டுக்கு கொண்டுவரப்படுவார் எனவும் தற்போதைய அரசால் உறுதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews