உணவுப் பஞ்சமா? – வாய்ப்பே இல்லை என்கிறார் மஹிந்தானந்த

Mahindananda Aluthgamage

நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மிரளும் தெரிவிக்கையில்,

” நாட்டில் விரைவில் பஞ்சம் ஏற்படும் என பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை.

பெரும்போக அறுவடையில் சற்று குறைவே ஏற்பட்டுள்ளது. இதனால் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் கூறுகிறேன்.

கடந்த போகத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அறுவடையே இருப்பில் இருந்த நிலையில், இன்றும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிச்சயம் இழப்பீடு வழங்கப்படும். நாம் விவசாயிகளை பாதுகாப்போம்.” – என்றார்.

#SriLankaNews

 

Exit mobile version