குதிரையில் உணவு டெலிவரி! – வைரலாகும் புகைப்படம்

ezgif 1 54bbb0d67a

இந்தியாவின் மும்பையில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்து வருகிறது.

வீதிகளை கடக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் வீடுகளிலேயே இருந்து உணவுகளை ஓடர் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மும்பையில் கனமழைக்கு இடையில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர் குதிரையைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை டெலிவரி செய்த வீடியோ மட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உணவு டெலிவரி செய்ய ஸ்விக்கி டெலிவரி நபர் ஒருவர் குதிரையில் செல்வது இடம்பெற்று உள்ளது. இதனை கண்ட சமூகதளவாசிகள், பெற்றோல், டீசல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு ஐடியாக நல்லாதாக இருக்கிறதே…! என குறிப்பிட்டு வருகிறார்கள்.

#IndiaNews

Exit mobile version