அநுராதபுரம் – யாழ்ப்பாணம் (A9) பிரதான வீதியின் மிகிந்தலை பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு, வானில் (Van) வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய ஐந்து இளைஞர்களும் உடனடியாக மிகிந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் அல்லது வாகனத்தின் அதீத வேகம் விபத்திற்குக் காரணமா என்பது குறித்து மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.