தையிட்டி ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

MediaFile 3 6

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐந்து பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் அவர்கள் அனைவரையும் செல்ல நீதவான் அனுமதித்தார்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தையிட்டி பகுதியில் இடம்பெற்ற நில ஆக்கிரமிப்பு மற்றும் ஏனைய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட பதற்றமான சூழலிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version