இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (நவ 13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
நற்சான்றுப் பத்திரம் கையளித்தவர்கள்
பின்வரும் நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் நற்சான்றுப் பத்திரங்களைச் சமர்ப்பித்தனர்:
கனடா உயர் ஸ்தானிகர்: இசபெல் மாரி கெதரின் மார்ட்டின் (Isabelle Marie Catherine Martin)
நெதர்லாந்து இராச்சிய தூதுவர்: வீபே ஜேகோப் டி போயர் (Wiebe Jacob de Boer)
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்: மெதிவ் ஜோன் டக்வேர்த் (Matthew John Duckworth)
அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர்: அப்துநோர் ஹொலிஃபி (Abdenour Houalifi)
அயர்லாந்து ஜனாநாயகக் குடியரசின் தூதுவர்: பெனடிக்ட் ஹஸ்குல்டிசன் (Benedict Hylkydisson)
அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.