நாட்டை வந்தடைந்தன பைசர் தடுப்பூசிகள்!

pfizer vaccine

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இத் தடுப்பூசிகள் இன்று (30) காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த திட்டத்தின் கீழ் 408,650 பைசர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதிகளவான பைசர் தடுப்பூசிகள் ஒரே தடவையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளதென சன்ன ஜயசுமன  தெரிவித்துள்ளார்.

விசேடதேவையுடையவர்கள்,சிறுவர்கள்,பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு பைசர் தடுப்பூசிகள் செலுத்தும் நடிவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version