கிளிநொச்சி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ சில மணி நேரங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த தீ விபத்தில் வைத்தியசாலையின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக நோயாளிகளுக்கான சிகிச்சைகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த பகுதியில் ஏற்பட்ட மின்சார ஒருக்கு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews