இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்கு 10,000ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கிடையிலான ஆலோசனைக்கூட்டம் அவசரம் அவசரமாக நாளையதினம் ஏற்பாடாகியுள்ளது.
இக்கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர் உள்ளிட்டோரும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை காலையுடன் முடிவுக்கு வரும் நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டத்தை தொடர்ந்து முதல்வருக்கு இது தொடர்பான விளக்க அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
#World